பிரின்ட் ஸ்க்ரீன் பெற புதிய வழியை விண்டோஸ் 7 தருகிறது :
பிரிண்ட் ஸ்க்ரீனை பெறுவதற்கு எண்ணற்ற மென்பொருள்கள் இருந்தாலும் நமக்காக விண்டோஸ் 7 ல் வழங்குகிறது .உங்களிடம் விண்டோஸ் 7 அல்லது விஸ்டா பதிப்பு இருந்தால் இது சாத்தியம்.
இது வேகமாகவும் எளிமையாகவும் அதன் வேலையை செய்கிறது .இதை பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கே புரியும் .இதற்க்கு கிழ்கண்ட வழிமுறைகளை கையாளவேண்டும் .
ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, snip என டைப் செய்திடவும். பின்னர், Snipping Tool என்பதில் கிளிக் செய்திடவும். உடனடியாக இந்த புரோகிராம் செயல்படத் தொடங்கும். இப்போது உங்கள் மானிட்டர் திரையின் ஒளி சற்றுக் குறைவாக இருப்பதாகக் காட்டப்படும். கவலைப்பட வேண்டாம். இப்போது காட்சிகளை கட் செய்திட நீங்கள் தயாராக இல்லை என்றால், உடனே இந்த செயலைக் கேன்சல் செய்துவிடலாம். Snipping என்பது படத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியினை ஒரு பெட்டியாகக் கட்டம் கட்டி, நறுக்குவதாகும். மவுஸ் மூலம், நீங்கள் விரும்பும் காட்சியினைக் கட்டம் கட்டலாம். இதற்கு சிகப்புக் கோடு உங்களுக்குத் துணை புரியும். மவுஸ் பட்டனை விலக்கியவுடன், அதன் மூலம் கட்டச் சிறையில் பிடிக்கப்பட்ட காட்சி தோன்றும். இப்போது இதனை நீங்கள் விரும்பும் பார்மட்டில் (GIF, JPEG, PNG, அல்லது HTML) இதனை சேவ் செய்து விடலாம். கிளிப் போர்டுக்கு காப்பி செய்திடலாம். அப்படியே இமெயில் செய்தியாக அனுப்பலாம். அல்லது அதில் குறிப்புகளை எழுதலாம். நல்ல சேவைதானே முயற்சி செய்து பாருங்கள் .உங்களுக்கு பிடித்து இருக்கும் .
No comments:
Post a Comment