ஜப்பானை உலுக்கிய சுனாமி:
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.9 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. மேலும் இந்த பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக ரஷ்யா, இந்தோனேஷியா, தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானைத் தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும். இதுவரை இந்த சுனாமியினால் 22 பேர் பலியாகியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
பூமத்திய ரேகையிலிருந்து 38.322 டிகிரி வடக்கும், அட்சரேகை 142.369 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் துறை தெரிவித்துள்ளது. ஆழிப்பேரலையின் உயரம் 10 முதல் 13 மீட்டர் உயரத்திற்கு எழுந்து தாக்கியதாக செய்திகள் தெரிவிகின்றன.
இதுவரையில் சுனாமியின் வரலாறு:
1755 ல் போர்ச்சுகலில் ஏற்பட்ட சுனாமியில் 60,000 பேர் பலியாகியுள்ளனர்.
1883 ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் 36,000 பேர் பலியாகியுள்ளனர்.
1908 ல் இத்தாலியில் ஏற்பட்ட சுனாமியில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
1896 ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் 27,000 பேர் பலியாகியுள்ளனர்.
1923 ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் ஒன்றறை லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
1933 ல் ஜப்பானில் ஏற்பட்ட அடுத்த சுனாமியில் 3,000 பேர் பலியாகியுள்ளனர்.
1960 ல் சிலியில் 23, 000 பேரும், 1976 பிலிப்பைன்சில் 8,000 பேரும் பலியாகியுள்ளனர்.
1998 ல் பப்பூவா நியூ கினியாவல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
2004 ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல நாடுகளைத் தாக்கியது. இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
கவிஞர் வைரமுத்துவின் சுனாமி கவிதை.
ஏ கடலே
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்
ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா
உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை?
உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக
எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்?
அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?
பிணங்களை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே காணோம்
மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது
பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை
இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு
இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்.
பாதிக்கப்பட்ட ஜப்பானுக்காக இந்த கவிதையை சமர்பிப்போம்...

No comments:
Post a Comment