என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Sunday, April 3, 2011

உலக கோப்பை கிரிக்கெட் 2011:(World cup cricket 2011)

உலக கோப்பை கிரிக்கெட்  2011 ஒரு பார்வை :
                 
     உலக கோப்பையை உலகமே எதிர் பார்த்து காத்திருந்தது .யார் கோப்பையை தட்டி செல்வார்கள் என்று மீண்டும் ஒரு முறை தான் ஒரு ராசியானவர் என்று நிருபித்துகாட்டி இருக்கிறார் டோனி அவர்கள் ,உலகமே தாங்கள் பக்கம் திரும்ப பார்க்க வைத்திருக்கிறார்கள் .
   

   தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்து கொண்டனர் நம்மவர்கள்.தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இலங்கை அணியை வென்று காட்டினர்.இந்தியா இந்த உலக கோப்பையில் மூன்று முறை இறுதி போட்டியில் விளையாடியது என்றே சொல்ல வேண்டும் .முதலில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவின் கனவை தகர்த்து எரிந்தது .பின்னர் நம்முடைய பரம எதிரி பாகிஸ்தானயும் வீட்டிற்க்கு அனுப்பியது.இறுதியாக இலங்கை அணியை வென்று வென்று  காட்டியது.

வென்று காட்டிய இளமை பட்டாளம் :
         இந்திய இளம் வீரர்கள் மற்றும் சீனியர் வீரர்களுடன் சேர்ந்து கோப்பையை வென்று தந்தது.அனைத்து வீரர்கள் செயல்பாடுகளும் சிறப்பாகவே இருந்தது .
ஆரம்பம் முதல் சச்சினுக்கு இந்த உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று சபதம் செய்தனர் அவ்வாறே செய்தும் காட்டி விட்டனர் .
28 வருடங்களுக்கு பிறகு :
        28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பையை வென்றது இந்தியா,நீண்ட வருடங்களாக இது ஒரு கனவாகவே இருந்து வந்தது ,அதை போக்கி விட்டனர் டோனி படை.அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகா வேண்டும் .அதுதான் ஒவ்வொரு இந்தியனின் கனவு ஆகும் .

உலக கோப்பை 2011  மறக்க முடியாத சில புகைப்படங்கள் :



          











                                                                   

 வாழ்க பாரதம் !!!                            வெல்க பாரதம் !!!         
    

2 comments:

  1. 2011 உலக கோப்பையை வென்ற? இந்திய அணி முதல் டெஸ்டில் 196 ரன்னிலும், 2ஆவது டெஸ்டில் 319 ரன்னிலும், 3ஆவது டெஸ்டில் 242 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.

    ReplyDelete





Popular Posts