என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Monday, April 18, 2011

கூகுள் கால்குலேட்டர் : (Google Calculator)

கூகுள் கால்குலேட்டர்:
                   
                                                கூகுள் புது புது அம்சங்களை கொண்டு வருவதில் கூகுளுக்கு நிகர் கூகுள் தான்.அதனால்தான் அனைவராலும் ஏற்று கொள்ளும் ஒரு தளமாக இருக்கிறது.தற்பொழுது அது கால்குலேட்டர் பயன்படுத்தும் வசதியை  கொடுத்திருக்கிறது.
                       சாதாரண கணக்கு போடும் கால்குலேட்டராக மட்டுமின்றி சயின்டிபிக் கால்குலேட்டராகவும் பயன்படுத்தலாம். சயின்டிபிக் பங்சன்களுக்கும் இதில் தீர்வு காணலாம். 
          
              
                 அரித் மேடிக் பங்சன், டிரிக்னோமெட்ரிக், ஹைபர்போலிக் மற்றும் லாக்ரிதம் செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம். அளவுகளை மாற்றிக் காணும் வசதியும் இதில் கிடைக்கிறது.
  பயன்படுத்தும் முறை :
                                               நீங்கள் கூகுள் சர்ச் பாக்ஸ்சில் 300 + 200 கொடுத்து பாருங்கள் அதற்க்கு 300 +200 =500 கிடைக்கும்.
             100ன் லாகிர்தம் வேல்யூ கண்டுபிடிக்க log (100) என டைப் செய்திடலாம். அதே போல cos வேல்யு கண்டுபிடிக்க cos (90) என டைப் செய்து மதிப்பினைப் பெறலாம். கரன்சி மாற்றங்கள், அளவு மாற்றங்கள் ஆகியவை யும் கணக்கிட்டு காட்டப்படுகின்றன. 100 USD in Indian Rupee எனக் கொடுத்தால் அன்றைய கணக்கின்படி இந்திய ரூபாய் மதிப்பு தரப்படும். 
         

2 comments:





Popular Posts